Click Here to loginHelp
 
HSCP Course & Content Materials > HSCP Course Content and Materials for Tamil 2

Course Content for Tamil 2

HSCP 2 முதல் பருவத்தின் நோக்கம்

புத்தகங்கள்:

தமிழ் நிலை 2 முதல் பருவம் இகரம்: (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்).

கட்டுரைப் பயிற்சிகள்: வகுப்பு 2.

கேட்டல் & பேசுதல்:

படக்காட்சிகள், சூழல்களைப் புரிந்து கொண்டு பேசுதல்.

சிறுசிறு தலைப்புகளில் கருத்தாடல் செய்தல்.

குறிப்பிட்ட தலைப்பில் செய்திகளைத் திரட்டிக் குழுவில் கலந்துரையாடுதல்.

தாம் கேட்ட புதிய சொற்கள், தொடர்கள், உரைப்பகுதிகள் முதலியவற்றின் பொருளுரை வினாக்கள் எழுப்பி விடை காணல்.

எளிய இலக்கணக் கூறுகளைப் புரிந்து கொண்டு பேசுதல். ((இடைசொற்கள், தினை, பால், எண், பெயெரெச்சம், வினையெச்சம், பெயரடை, வினையடை போன்றவை)

ஒலி வேறுபாடுடைய சொற்களின் பொருள் அறிந்து சரியாக ஒலித்துப் பழகுதல்.

மொழியின் நுட்பங்களைப் புரிந்து கொண்டு பொருத்தமாகப் பேசுதல். (மரபுத்தொடர்கள், இணைமொழிகள், வினாச்சொற்கள் போன்றவை)

படக்கதைகளைப் புரிந்து கொண்டு கோர்வையாகப் பேசுதல்.

திட்டப்பணியைச் செய்வார்கள்.

கேட்டல் கருத்தறிதல் மூலம் கேள்விகளுக்கு விடையளிப்பார்கள்.

விளையாட்டின் மூலம் தமிழ் மொழியினைக் கற்றுக் கொள்வார்கள்.

படித்தல்:

சிறுசிறு தொடர்களைப் படித்துப் புரிந்து கொள்ளுதல்.

எளிய உரைப்பகுதிகளைப் படித்துக் கருத்துணர்தல்.

புதிய சொற்களைப் படித்துப் பொருள் அறிதல்.

குரல் ஏற்ற இறக்கம், ஒலிப்புமுறை அறிந்து தெளிவாகப் படித்தல்.

எளிய பாடல்களைப் பாடி மகிழ்தல்.

அறக்கருத்துகள் உணர்த்தும் பாடல்களைப் படித்துப் பொருளுணர்தல்.

இலக்கணக்கருத்துக்களைப் படித்துத் தெரிந்து கொள்ளுதல். (இருதிணை, ஐம்பால், இருவகை எண் (ஓருமை, பன்மை, பெயரெச்சம், வினையெச்சம், பெயரடை, வினையடை...)

எளிய நடை இலக்கணக் கூறுகளைப் படித்துத் தெரிந்து கொள்ளுதல். (மரபுத்தொடர்கள், இணைமொழிகள்)

இருசொல் தொடர்களைப் படித்தல்.

விளம்பரம் / அறிவிப்பு முதலானவற்றைப் படித்துக் கருத்துணர்தல்.

கேட்டல் கருத்தறிதல் மூலம் கேள்விகளுக்கு விடையளித்தல்.

வெற்றிவேற்கை, திருக்குறள், புதிய ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, இனியவை நாற்பதைக் கற்றுக் கொள்ளுதல்.

தமிழ் மொழி சார்ந்த விளையாட்டை விளையாடுதல்.

எழுதுதல்:

புதிய சொற்களுக்குப் பொருள் அறிந்து எழுதுதல்.

உரைப்பகுதிகளைப் படித்துப் புரிந்து கொண்டு விடை எழுதுதல்.

இலக்கணக் கருத்துக்களைப் புரிந்து கொண்டு பொருத்தமாக எழுதிப் பழகுதல். (இருதிணை, ஐம்பால், ஒருமை, பன்மை, பெயரெச்சம், வினையெச்சம், பெயரடை, வினையடை...)

எளிய மொழிப்பயிற்சியைப் புரிந்து கொண்டு விடையளித்தல், (ஒலி வேறுபாடுடைய சொற்கள், வினைச் சொற்கள் போன்றவை)

உரைப்பகுதியைப் படித்துப் பொருளுணர்ந்து வினாக்களுக்கு விடை எழுதுதல்.

ஆங்கிலத்திற்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுதல்.

படத்தொகுப்புகள், நாட்குறிப்புகள், கையெழுத்து இதழ்கள் உருவாக்குதல்.

எளிய செயல்திட்டங்களை மேற்கொள்ளுதல்.

இடைச்சொற்களைக் கற்றுக் கொள்வார்கள்.

கருத்து விளக்கப்படத்தில் உள்ள அறிவிப்பைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுவார்கள்.

கதை எழுதக் கற்றுக் கொள்வார்கள்.

பத்தியை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார்கள்.

மரபுத்தொடர்களைக் கற்றுக் கொள்வார்கள்.

கொடுக்கப்பட்டுள்ள சொல்லிலிருந்து புதிய சொற்களை உருவாக்குவார்கள்.

உயர்திணை, அஃறிணைச் சொற்களைக் கற்றுக் கொள்வார்கள்.

சொல்லப்படும் சொற்களை வாக்கியங்களில் அமைப்பார்கள்.

இணைமொழிகளைக் கற்றுக் கொள்வார்கள்.

குறிப்புகளைக் கொண்டு சொற்கள் உருவாக்குவார்கள்.

வேற்றுமை உருபுகளைக் கற்றுக் கொள்வார்கள்.

பிழைகளை நீக்கி எழுதக் கற்றுக் கொள்வார்கள்.

இருபடங்களின் பெயர்களை இணைத்து, மரபு விளையாட்டின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுவார்கள்.

எண்ணுப்பெயர்களைக் கற்றுக் கொள்வார்கள்.

காலங்களைக் கற்றுக் கொள்வார்கள்.

சொற்களை முறைப்படுத்தி தொடர்களை அமைப்பார்கள்.

HSCP 2 இரண்டாம் பருவத்தின் நோக்கம்

புத்தகங்கள்:

தமிழ் நிலை 2 இரண்டாம் பருவம் இகரம்: (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்).

தொடக்கநிலை எளிய கட்டுரைப் பயிற்சிகள் 3.

கேட்டல் & பேசுதல்:

படக்காட்சிகள், சூழல்களைப் புரிந்து கொண்டு பேசுதல்.

சிறுசிறு தலைப்புகளில் கருத்தாடல் செய்தல்.

குறிப்பிட்ட தலைப்பில் செய்திகளைத் திரட்டிக் குழுவில் கலந்துரையாடுதல்.

தாம் கேட்ட புதிய சொற்கள், தொடர்கள், உரைப்பகுதிகள் முதலியவற்றின் பொருளுரை வினாக்கள் எழுப்பி விடை காணல்.

எளிய இலக்கணக் கூறுகளைப் புரிந்து கொண்டு பேசுதல். ((இடைசொற்கள், தினை, பால், எண், பெயெரெச்சம், வினையெச்சம், பெயரடை, வினையடை போன்றவை)

ஒலி வேறுபாடுடைய சொற்களின் பொருள் அறிந்து சரியாக ஒலித்துப் பழகுதல்.

மொழியின் நுட்பங்களைப் புரிந்து கொண்டு பொருத்தமாகப் பேசுதல். (மரபுத்தொடர்கள், இணைமொழிகள், வினாச்சொற்கள் போன்றவை)

படக்கதைகளைப் புரிந்து கொண்டு கோர்வையாகப் பேசுதல்.

திட்டப்பணியைச் செய்வார்கள்.

கேட்டல் கருத்தறிதல் மூலம் கேள்விகளுக்கு விடையளிப்பார்கள்.

விளையாட்டின் மூலம் தமிழ் மொழியினைக் கற்றுக் கொள்வார்கள்.

படித்தல்:

சிறுசிறு தொடர்களைப் படித்துப் புரிந்து கொள்ளுதல்.

எளிய உரைபகுதியைப் படித்துக் கருத்துணர்தல்.

புதிய சொற்களைப் படித்துப் பொருள் அறிதல்.

குரல் ஏற்ற இறக்கம் ஒலிப்புமுறை அறிந்து தெளிவாகப் படித்தல்.

எளிய பாடல்களைப் பாடி மகிழ்தல்.

அறக்கருத்துகள் உணர்த்தும் பாடல்களைப் படித்துப் பொருளுணர்தல்.

இலக்கணக் கருத்துகளைப் படித்துத் தெரிந்து கொள்ளுதல் (ஓரு சொல், பல பொருள், பல பொருள் ஒரு பொருள், இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்கள், தொடரமைப்புகள்)

எளிய நடைமுறை இலக்கணக் கூறுகளைப் படித்துத் தெரிந்து கொள்ளுதல். (மரபுச்சொற்கள், இணைமொழிகள், மரபுத்தொடர்கள், உவமைத்தொடர்கள், நிறுத்தக்குறிகள் போன்றவை)

இருசொல் தொடர்களைப் படித்தல்.

விளம்பரம் / அறிவிப்பு முதலானவற்றைப் படித்துக் கருத்துணர்தல்.

கேட்டல் கருத்தறிதல் மூலம் கேள்விகளுக்கு விடையளித்தல்.

விவேக சிந்தாமணி, பழமொழி நானூறு, மூதுரை, திருவள்ளுவ மாலை, ஆசாரக் கோவையைக் கற்றுக் கொள்ளுதல்.

தமிழ் மொழி சார்ந்த விளையாட்டை விளையாடுதல்.

எழுதுதல்:

புதிய சொற்களுக்குப் பொருள் அறிந்து எழுதுதல்.

உரைப்பகுதிகளைப் படித்துப் புரிந்து கொண்டு விடை எழுதுதல்.

இலக்கணக் கருத்துக்களைப் புரிந்து கொண்டு பொருத்தமாக எழுதிப் பழகுதல். (ஒரு சொல் பல பொருள், பல சொல் ஒரு பொருள் இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்கள், தொடரமைப்புகள்)

எளிய மொழிப்பயிற்சியைப் புரிந்து கொண்டு விடையளித்தல், (ஒலி வேறுபாடுடைய சொற்கள், மரபுச் சொற்கள், இணைமொழிகள், மரபுத்தொடர்கள், உவமைத்தொடர்கள், நிறுத்தற்குறிகள்)

விடுகதை / புதிர் பொன்றவற்றைப் படித்து விடை எழுதுதல்.

உரைப்பகுதியைப் படித்துப் பொருளுணர்ந்து வினாக்களுக்கு விடை எழுதுதல்.

ஆங்கிலத்திற்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுதல்.

படத்தொகுப்புகள், நாட்குறிப்புகள், கையெழுத்து இதழ்கள் உருவாக்குதல்.

வேற்றுமை உருபைக் கற்றுக் கொள்வார்கள்.

காலங்களைக் கற்றுக் கொள்வார்கள்.

பழமொழிகளில் விடுபட்ட சொற்களைச் சரியாகப் பொருத்துவார்கள்.

படங்களைப் பார்த்து வினாக்களுக்குரிய விடையைக் கண்டறிவார்கள்.

சொல்லுக்கேற்ற வாக்கியங்களை அமைப்பார்கள்.

பத்தியைக் கருத்தூன்றிப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுவார்கள்.

சொல்லப்படும் சொற்களை வாக்கியங்களில் அமைப்பார்கள்.

பெயரெச்சத்தைக் கற்றுக் கொள்வார்கள்.

வினையெச்சத்தைக் கற்றுக் கொள்வார்கள்.

கருத்து விளக்கப்படத்தைப் பார்த்து கேள்விகளுக்கு விடையளிக்கக் கற்றுக் கொள்வார்கள்.

இரு படங்களுக்கான சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குவார்கள்.

எண்ணுப்பெயர்களைக் கற்றுக் கொள்வார்கள்.

குறிப்புகளைப் படித்தும் கீழே தரப்பட்டுள்ள எழுத்துகளைக் கொண்டும் கட்டங்களில் மறைந்திருக்கும் சொற்களைக் கண்டறிவார்கள்.

ஒலி வேறுபாட்டைக் கற்றுக் கொள்வார்கள்.

சொல் அகராதி விளையாட்டை விளையாடுவார்கள்.

எழுவாய், பயனிலை, செயப்படுபொருளைக் கற்றுக் கொள்வார்கள்.

செய்வினைத் தொடர்கள், மற்றும் செயப்பாட்டுவினைத் தொடர்களைக் கற்றுக் கொள்வார்கள்.

HSCP Home Page