Click Here to loginHelp
 

HSCP Course & Content Materials > HSCP Course Content and Materials for Tamil 1

Course Content for Tamil 1

HSCP 1 முதல் பருவத்தின் நோக்கம்

புத்தகங்கள்:

தமிழ் நிலை 1 முதல் பருவம் அகரம் பகுதி 1, 2: (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்)


கையெழுத்துப் பயிற்சி.


கேட்டல்:

எழுத்துகளின் சரியான ஒலிப்பைக் கேட்டறிதல்.


பாடலை இனிய ஓசை நயத்தோடு கேட்டல்.


சொற்களைப் படத்துடன் ஒப்பிட்டுக் கேட்டல்.


சிறு சிறு தொடர்களைக் கேட்டல்.


படங்களுடன் உரையாடலைக் கேட்டல்.


கிரந்த எழுத்துகளின் ஒலிப்பைத் தெரிந்து கொள்ளுதல்.


குடும்பத்திலுள்ள உறவுப்பெயர்களைக் கேட்டறிதல்.


ஓரெழுத்து, ஈரெழுத்துச் சொற்களைக் கொண்ட சிறு சிறு தொடர்களைக் கேட்டல்.


பயன்பாட்டிலுள்ள சொற்களைக் கொண்டு ஒருமை பன்மை பற்றிக் கேட்டறிதல்.


சூழல் சார்ந்த பொருள்களுடன் வடிவங்கள் பற்றிய செய்திகளைக் கேட்டறிதல்.


எளிய தொடர்கள் வாயிலாக மூவிடப் பெயர்களைக் கேட்டறிதல்.


ர/ற, ல/ள/ ழ.ந/ண/ன ஒலி வேறுபாடு சொற்களைக் கேட்டறிதல்.


பயன்பாட்டிலுள்ள பெயர்ச்சொல், வினைச்சொல், பெயரடை, வினையடை


வேற்றுமை உருபுகள் கொண்ட சிறு சிறு தொடர்களைக் கேட்டறிதல்.

பேசுதல்:

எழுத்துகளின் ஒலிப்பை ஒலித்தல்.


பாடலை இனிய ஓசை நயத்தோடு கூறுதல்.


சொற்களைச் சரியான /ஒலிப்புடன் ஒலித்தல்.


சிறு சிறு தொடர்களைச் சொல்லுதல்.


சிறு சிறு சொற்களைக் கொண்டு தொடர்களை உருவாக்கித் தானே பேசுதல்.


படங்களைப் பார்த்துச் சிறு சிறு தொடர்களைப் பேசுதல்.


ஓரெழுத்து, ஈரெழுத்துச் சொற்களைக் கொண்டு சிறு சிறு தொடர்கள் அமைத்துப் பேசுதல்.


படங்களுக்குரிய சொற்களின் சரியான ஒலிப்பைச் சொல்லுதல்.


பயன்பாட்டிலுள்ள வடிவங்களைப் பற்றியும் பேசுதல்.


எளிமையான சிறு சிறு தொடர்களை அமைத்து, அவற்றின் மூலம் மூவிடப் பெயர்களின் வேறுபாடு அறிந்து பேசுதல்.


அன்றாடப் பயன்பாட்டுச் சொற்களை ஒலித்து ர/ற, ல/ள/ ழ.ந/ண/ன ஒலி வேறுபாடு சொற்களைப் பேசிப் பழகுதல்.


பயன்பாட்டிலுள்ள தொடர்களில் பெயர்ச்சொல், வினைச்சொல், பெயரடை. வினையடை ஆகியவற்றை வேறுபடுத்தி ஒலித்துப் பழகுதல்.


வேற்றுமை உருபுகளைப் பயன்படுத்திச் சிறு சிறு தொடர்களாகப் பேசுதல்.


திட்டப்பணி செய்தல்.

படித்தல்:

எழுத்துகளைச் சரியான ஒலிப்புடன் பிழையின்றிப் படித்தல்.


எழுத்துகளை குரல் ஏற்ற இறக்கத்துடன் பிழையின்றிப் படித்தல்.


குறில் நெடில் வேறுபாடறிந்து படித்தல்.


வல்லினம், மெல்லினம், இடையினம் தொடர்பான சொற்களைப் படித்தல்.


கிரந்த எழுத்துகளை அடையாளம் கண்டு படித்தல்.


ஈரெழுத்துச் சொற்களைப் படித்துப் பழகுதல்.


ஒருமை பன்மைச் சொற்களை உணர்ந்து படித்தல்.


சூழல் சார்ந்த வடிவங்கள் தொடர்பான செய்திகளைப் படித்தறிதல்.


மூவிடப் பெயர்களின் தொடர் அமைப்புமுறையை இனங்கண்டு படித்தல்.


காணப்படும் ர/ற,ல/ள/ழ,ந/ண/ன ஒலி வேறுபாடு சொற்களைப் படித்தறிதல்.


சூழல் சார்ந்த சொற்களில் பெயர்ச் சொல், வினைச்சொல், பெயரடை, வினையடை வேறுபாடு அறிந்து / படித்தறிதல்.


வேற்றுமை உருபுகள் உள்ள தொடர்களைப் படித்துப் பழகுதல்.


மொழியிலுள்ள அனைத்து எழுத்துகளின் ஒலிவடிவ, வரிவத் தொடர்களை இனங்கண்டு முறையாக உச்சரித்துப் பழகுதல்.


பாடல்களைச் சந்த ஒலிப்புடன் குரலில் ஏற்றத்தாழ்வுடன் படித்துப் பழகுவர்.


எழுத்துகள், சொற்கள் ஆகியவற்றைப் பொருளுணர்ந்து படித்தல்.


எளிமையான சொற்களைச் சொற்றொடராக்கிப் படித்துப் பழகுதல்.


பாடப்பொருண்மை பகுதியிலிருக்கும் வினாக்களுக்கு விடையளிக்க முற்படுவர்.


எளிய இலக்கண கூறுகளின் அமைப்பு முறைகளைப் படித்தறிதல்.


இரண்டு. மூன்று சொல் கொண்ட தொடர்களைப் பொருளுணர்ந்து படித்துப் பழகுவர்.

எழுதுதல்:

வளைவு, சுழி கோடு. புள்ளி ஆகியவற்றின் துணை கொண்டு எழுத்துகளை இனம் கண்டு எழுதுதல்.


எழுத்துகள். சொற்களைத் தானே எழுதுதல்.


குறில், நெடில் எழுத்துகளை இனம் கண்டு எழுதுதல்.


வல்லினம், மெல்லினம், இடையினத்தை இனம் கண்டு எழுதுதல்.


ஒருமை, பன்மை சொற்களை இனம் கண்டு எழுதுதல்.


பயிற்சிகள் மூலம் சிறு சிறு சொற்களை எழுதுதல்.


எழுத்துகளின் பாகுபாடுகளை அறிந்து பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.


ஓரெழுத்து, ஈரெழுத்துச் சொற்களை எழுதிப் பழகுதல்.


படங்கள் வாயிலாக ஒருமை பன்மை வேறுபாடு அறித்து எழுதிப் பழகுதல்.


வடிவங்களை வரைந்து அவற்றின் பெயர்களை எழுதிப் பழகுதல்.


மூவிடப் பெயர்களைச் சிறு சிறு தொடர்களாக எழுதிப் பழகுதல்.


சொற்களிலுள்ள ர/ற, ல/ள/ழ, ந/ண/ன ஒலி வேறுபாடுள்ள சொற்களை எழுதுதல்.


பெயர்ச்சொல், வினைச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு பெயரடை, வினையடையை உருவாக்கி எழுதுதல்.


சிறு சிறு தொடர்களில் வேற்றுமை உருபுகளைப் பயன்படுத்தி எழுதுதல்.

HSCP 1 இரண்டாம் பருவத்தின் நோக்கம்

புத்தகங்கள்:

தமிழ் நிலை 1 இரண்டாம் பருவம் அகரம்: (கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்)

கேட்டல்:

படங்கள். ஓவியங்கள். கதைப்படங்களை உற்றுநோக்கிச் சொல்லப்படும் சொற்களைக் கேட்டல்.


புதிய சொற்கள் அமைந்த பாடல்களைக் கவனத்துடன் பொருள் புரிந்து கேட்டறிந்து கொள்ளுதல்


சிந்தனையைத் தூண்டும் எளிய கதைகளைக் கவனத்துடன் கேட்டறிதல்.


வாய்மொழியிலான வருணனைகள், புதிர்கள், சொல் விளையாட்டிற்கான விதிமுறைகள் ஆகியவற்றைக் கேட்டல்.


எளிய வாய்மொழி அறிவுரைகளையும், நூல்களின் அறக்கருத்துகளையும் கேட்டுப் புரிந்துகொண்டு அதற்கேற்ப வினையாற்றுவர்.


வகுப்பறை மட்டுமின்றிப் பொதுப் பயன்பாட்டிலும் பிறர் பேசுவதைப் பொறுப்புடன் கவனத்துடன் கேட்டுப் புரிந்து கொண்டு முறையான துலங்களை வெளிப்படுத்துவர்.


எளிய இலக்கணக் கூறுகளைக் கேட்டறிதல். சொற்களஞ்சியத்தைப் பெருக்குவதற்கான சொற்களைப் பொருள் புரிந்து கேட்டல்.


குழுத்திட்டப்பணியாக குறும்படத்தை உருவாக்குதல்.

பேசுதல்:

படக்கதைகளைப் பார்த்து நிகழ்வுகளைக் கூறுதல்.


ஓசைநயமிக்க பாடல்களைத் தனியாகவும் குழுவாகவும் உரிய ஒலிப்புடன் பாடுதல்.


பாடப்பொருண்மைகளைப் படித்தறிந்து கேட்கப்படும் எளிய வினாக்களுக்கு எளிய விடையாக முழுமையான சொற்றொடரில் விடை கூறுதல்.


கேட்டறிந்த கதைகள். பாடல்களைத் தம் கற்பனையுடன் இணைத்துப் பேசப் பழகுதல்.


சொற்கள், தொடர்களை முறையாகவும், சரியாகவும் / ஒலிப்பர்.


பாடப்பொருண்மைக்கேற்ப பயன்பாட்டுப் பொருள்களைத் தொடர்புபடுத்திப் பொருள் விளங்கும் வகையில் தெளிவாகப் பேச முற்படுவார்கள்.


எளிய இலக்கணக் கூறுகளின் அமைப்புமுறையுடன் சொற்களைப் பொருளுடன் உச்சரித்துப் பழகுதல்.

படித்தல்:

மொழியிலுள்ள அனைத்து எழுத்துகளின் ஒலிவடிவ, வரிவத் தொடர்களை இனங்கண்டு முறையாக உச்சரித்துப் பழகுதல்.


பாடல்களைச் சந்த ஒலிப்புடன் குரலில் ஏற்றத்தாழ்வுடன் படித்துப் பழகுவர்.


எழுத்துகள், சொற்கள் ஆகியவற்றைப் பொருளுணர்ந்து படித்தல்.


எளிமையான சொற்களைச் சொற்றொடராக்கிப் படித்துப் பழகுதல்.


பாடப்பொருண்மை பகுதியிலிருக்கும் வினாக்களுக்கு விடையளிக்க முற்படுவர்.


எளிய இலக்கண கூறுகளின் அமைப்புமுறைகளைப் படித்தறிதல்.


இரண்டு. மூன்று சொல் கொண்ட தொடர்களைப் பொருளுணர்ந்து படித்துப் பழகுவர்.

எழுதுதல்:

படங்களைப் பார்த்துப் பெயர்களை எழுதிப் பழகுதல்.


சொற்களை ஒலிப்பு முறைக்கேற்ப எழுத முற்படுவார்கள்.


சொற்களைக் கோவையாக்கிச் சிறுசிறு தொடர்களை உருவாக்கி எழுதுதல்.


எளிய பாடல்கள். கதைகள், உரைநடைப் பகுதிகளிலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்குச் சொற்களாகவும், சிறுசிறு தொடர்களாகவும் விடை எழுதி பழகுவார்கள்.


எளிய இலக்கணக் கூறுகளைப் பயன்பாட்டு அடிப்படையில் எழுதிப் பார்த்தல்.


எழுதும் திறனை வளர்ப்பதற்காக அவரவர் நடையில் சிறுசிறு தொடர்களை எழுத முற்படுவார்கள்.


இரண்டு, மூன்று சொல் கொண்ட தொடர்களை இலக்கண முறைப்படி எழுதுவார்கள்.


இன எழுத்துகள், வினா எழுத்துகள், திணை, எண்ணுப் பெயர்கள், சுட்டு எழுத்துகள், ஒரு சொல், பல பொருள், பல சொல், ஒரு பொருள், காலங்கள், எதிர்ச்சொற்கள், வேற்றுமை உருபுகளை இனம் கண்டு எழுதுதல்.

HSCP Home Page